புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்

2006 – 2007ஆம் ஆண்டுகளிலிருந்து புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் [SPDC] நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் (PIOs) மற்றும் இந்தியாவில் வதியாத இந்தியர்கள் (NRIs), இந்திய பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள இதன் மூலமாக நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.

தொழில் சார்ந்த மற்றும் தொழில்முறை சாராத சகல துறைகளையும் உள்ளடக்கியதாக இந்த SPDC திட்டம் அமைந்துள்ளது.

மேலும், புதுமுக (முதலாம் வருடம்) மாணவர்கள் மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

இந்த புலமைப்பரிசில் தொடர்பான விரிவான தகவல்களை http://www.spdcindia.gov.in என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கையிலுள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிகள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தளத்தின் ஊடாக நேரடியாக விண்ணப்பிக்குமாறு கோரப்படுகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்