புறக்கோட்டை மற்றும் விமான நிலையம் இடையே புதிய இ.போ.ச சொகுசு பேருந்து சேவை!
கட்டுநாயக்க விமான நிலையம் (BIA) மற்றும் புறக்கோட்டையில் உள்ள மகும்புர மல்டிமோடல் சென்டர் இடையே, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான, புதிய சொகுசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பொலிஸ் நிலையம் அருகேயுள்ள, பிரதான சாலையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில், குறித்த பேருந்து நிறுத்தப்படும் என்றும், அங்கிருந்து பயணிகள் குறித்த பேருந்தில் ஏறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்குச் சென்று வர, போக்குவரத்து வசதிகளை நாடும் பயணிகளின் வசதிக்காக, இந்த பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதாக, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் (AASL) தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்