
பிள்ளையான் கைது செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கது: சாணக்கியன்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதை தாம் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இந்த கைது நடவடிக்கை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு இன்று புதன் கிழமை உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாணக்கியன் வலியுறுத்தினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்