
பிரிந்த காதலி கனவில் வந்தால் என்ன பலன்
பிரிந்த காதலி கனவில் வந்தால் என்ன பலன்
பிரிந்த காதலி கனவில் வந்தால் என்ன பலன்
💢பிரிந்த காதலியோ, காதலனோ கனவில் வந்தால் அன்றைய நாள் முழுவதும் அந்த கனவு நம்மை தொந்தரவு செய்துகொண்டே இருக்கும். இதனால் அவர்களின் ஞாபகங்கள் வந்து வந்துபோகும். இதற்கு காரணம்
- அவர் உங்களைத் துரத்துவது போல் கனவு வந்தால்இ பழைய காதலி அல்லது காதலன் உங்களுடன் பேச முற்படுகிறார். மீண்டும் காதல் உறவில் இணைய ஆசைப்படுகிறார். ஆனால் உங்களுக்கு அதில் விருப்பம் இல்லை என்று அர்த்தமாகும்.
- அவர் இறந்துவிட்டதுபோல் கனவு கண்டால் அது பாசிடிவ் அறிகுறியே. அதாவது உங்களுக்கு அவர் மீது மீண்டும் ஈர்ப்பு உண்டாகிறது அல்லது பழைய நினைவுகளை நினைத்து ஏங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
- சந்திப்பது போல் கனவு வந்தால், இது பொதுவாக பலருக்கும் வரும் கனவுதான். இது அடிக்கடி சமீபத்தில் பிரிந்தவர்களுக்கு நிகழும். இவ்வாறு நிகழ்வது ஏதோ இருவருக்குள் பேசித்தீர்க்க கணக்கு பாக்கி இருக்கலாம். அது இன்னும் முடியாமல் இருக்கலாம். அந்த பிரிவில் உங்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியிருக்கலாம்.
- திருமணம் செய்வது போல் கனவு வந்தால், இதற்கு காரணம் அவருடன் நீங்கள் இணைய நினைக்கிறீர்கள் என்று இல்லை. புதிய பாதையை நோக்கி பயணிக்க நினைக்கிறீர்கள். மறக்க நினைக்கிறீர்கள். ஆழமான உறவை எதிர்பார்க்கிறீர்கள் என்று அர்த்தம்.
- மீண்டும் அவருடன் காதல் கனவு வந்தால், தற்போது நீங்கள் வேறொரு காதலில் இருந்தாலும் அவருடன் காதல் உறவில் இருப்பதுபோல் நெருக்கமான கனவு கண்டால் தற்போதைய காதலில் ஏதோ பிரச்னை. பழைய காதல் வாழ்க்கையை தற்போதைய காதலுடன் ஒப்பிடுகிறீர்கள். ஏதோ விடுபடுவதுபோல் தோன்றினால் அவ்வாறு கனவு வரலாம்.
- உங்கள் முன்னாள் காதலி அல்லது காதலனுடன் நீங்கள் சண்டையிடுவதை போல கனவு வந்தால், தற்போது இருக்கும் உறவு சலிப்படை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்துகிறது. உங்களின் ஆசைகளை தற்போது உள்ளவர் நிறைவேற்றினாலும், சில விஷயங்களில் அவர் மீது உள்ள கோவம் இன்னும் தீரவில்லை என்பதை உணர்த்துகிறது.
- சில சமயங்களில் புதிய உறவில் இருக்கும் போதுஇ நமது முன்னாள் காதலன் மற்றும் காதலியுடன் உடலுறவில் ஈடுபடுவது போல நாம் கனவு கண்டிருப்போம். இதற்கான அர்த்தம் என்னவென்றால்இ தற்போதைய துணையுடன் உள்ள நெருக்கம் அவ்வளவாக இல்லை என்பதை குறிக்கிறது. எல்லா விஷயங்களிலும் அவரை இவர் பூர்த்தி செய்யவில்லை என அர்த்தம். அதுமட்டும் அல்லஇ உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை இன்னும் நேசிக்கிறீர்கள் என அர்த்தம்.
- உங்கள் முன்னாள் காதலி அல்லது காதலனுக்கு பரிசு கொடுப்பது போல நீங்கள் கனவு கண்டால்இ உங்கள் மனதில் இன்னும் முந்தைய உறவைச் சுமக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். முந்தைய உறவு மற்றும் முன்னாள் எண்ணங்களிலிருந்து உங்களால் எப்போதும் வெளியேற முடியாது. எனவேஇ புதிய உறவில் இருந்தால் சற்று கவனம் தேவை.
💢எப்போது கனவு கண்டால் பலிக்கும் நள்ளிரவு 1 மணிக்குக் கனவு கண்டால்இ அதன் பலன் ஒரு வருடம் கழித்து கிடைக்கும். நள்ளிரவு 2 மணிக்கு மேல் கனவு கண்டால்இ அதன் பலன் மூன்று மாதத்தில் கிடைக்கும். அதுவேஇ அதிகாலையில் உங்களுக்குக் கனவு வந்தால்இ அது உடனடியாக பலிக்கும் எனக் கனவு சாஸ்திரம் கூறுகிறது.
பிரிந்த காதலி கனவில் வந்தால் என்ன பலன்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்