பிரதமரின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்கவில்லை
அரசாங்கம் மற்றும் கட்சிகளுக்குள் உடனடி அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், நாட்டை முன்னெடுப்பதற்காகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்துள்ளார்.
இருப்பினும் ஜனாதிபதி அதை ஏற்கவில்லை. இதைவேளை புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவின் பெயர் முன்மொழியப்பட்ட போதும் ஆனால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
புதிய நிதியமைச்சராக ஹர்ச டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.