பிக்கு மாணவர் ஒன்றியத்தினரின் ஆர்ப்பாட்டத்தினால் பதற்றம்

அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம், அரசாங்கத்துக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டதுடன் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நுழைந்ததால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் குடைகளை ஏந்தியிருந்த எதிர்ப்பாளர்கள், ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நுழைந்துள்ளனர்.

அப்பகுதியில் கடமையிலிருந்த பொலிஸாரால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாததால், கலகம் அடக்கும் பொலிஸாரும் நீர்த்தாரை பிரயோகிக்கும் வாகனங்களும் அப்பகுதிக்கு அழைக்கப்பட்ட்டிருந்தது.