பாதுகாப்பு உத்தியோகத்தரை கொன்று விட்டு 9 மில்லியன் ரூபாய் கொள்ளை : விசாரணைகள் ஆரம்பம்
நுவரெலியா பிரதேசத்தின் இலங்கை போக்குவரத்து சபையின் அலுவலகத்தில் இருந்து 09 மில்லியன் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இனந்தெரியாத குழுவொன்று நுவரெலியா டிப்போவின் பாதுகாப்பு உத்தியோகத்தரை படுகொலை செய்து விட்டு வங்கியில் வைப்பிலிடுவதற்காக வைத்திருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா-கல்பாய பிரதேசத்தில் வசிக்கும் 85 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இதன்போது கொலை செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரது பாதுகாப்புச் சாவடிக்குள் இருந்த போது சந்தேகநபர்கள் கூரிய ஆயுதத்தால் அவரது தலையில் தாக்கி கொலை செய்துவிட்டு அதன்பின்னர் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது டிப்போவின் பொறுப்பதிகாரி மற்றும் காசாளர் ஆகியோர் டிப்போவில் இருந்ததாகவும் அது இரவு வேளை என்பதால் இருவரும் தூங்கிவிட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்