
பாடசாலைகளில் காலை ஒன்று கூடலில் மயங்கி விழுந்த மாணவர்கள்
மதவாச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தந்திரிமலை பகுதியில் பாடசாலை காலை ஒன்று கூடலின் போது மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.
தந்திரிமலை தம்பையா கிராமத்தில் அமைந்துள்ள தர்மபால வித்தியாலயம், கிம்புல்வெவ ஆனந்த வித்தியாலயம் மற்றும் மஹாவிலாச்சிய சித்தார்த்தா கல்லூரி மாணவர்கள் சிலர் இவ்வாறு மயங்கி விழுந்துள்ளார்.
மாணவர்கள் மயங்கி விழுந்ததால் காலை ஒன்று கூடலை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக, அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் சில மாணவர்கள் காலை மற்றும் இரவு ஆகிய இரண்டு வேளையும் உணவு உண்ணாமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.