பஸ்- மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

பூண்டுலோயா- கம்பளை வீதியில் பாலுவத்த சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் வௌஹேன பகுதியைச் சேர்ந்த ஆர். ஜி. அனுஷா குமாரி வயது (55) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் சிறுகாயங்களுக்குள்ளான நிலையில், அதில் பயணித்த பெண் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.