பல தூதரகங்களுக்கு பூட்டு

டொலர் பிரச்சினையைக் காரணங்காட்டி உலக நாடுகள் பலவற்றில் உள்ள இலங்கை தூதரகங்களை அரசாங்கம் மூடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸமன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஈராக், நோர்வே, சைப்பிரஸ் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களை தற்போதைய அரசாங்கம் மூடியுள்ளது. சைப்பிரஸில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் வாழ்கிறார்கள்.

இவ்வாறான நிலையில் அங்குள்ள தூதரகத்தையும் அரசாங்கம் மூடியுள்ளதாக சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேலும் தெரிவித்தார்.