பல்லி வராமல் தடுக்க என்ன செய்யலாம்

பல்லி வராமல் தடுக்க என்ன செய்யலாம்

பல்லி வராமல் தடுக்க என்ன செய்யலாம்

🟦வீட்டின் சுவர்களில் இருந்து அச்சமூட்டும் பல்லியை விரட்டுவதற்கு பல கெமிக்கல் கலந்த பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அதனைப் பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அபாயத்தை விளைவித்துவிடும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்கள் சிறந்தது என்பதைப் புரிந்து, அந்த வழியிலேயே பல்லியை விரட்ட வேண்டும். மேலும் பல்லியை விரட்ட பல அருமையான பொருட்கள் வீட்டிலேயே உள்ளன. அத்தகைய பொருட்களைக் கொண்டு விரட்டினால், நிச்சயம் பல்லியை விரட்டிவிடலாம். அந்தவகையில் பல்லியை விரட்டுவதற்கு பயன்படும் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

🔶முட்டையின் ஓட்டை வீட்டின் மூலைகளில் வைத்தால், அதிலிருந்து வெளிவரும் வாசனையால், பல்லி வராமல் இருக்கும். குறிப்பாக முட்டை ஓட்டை 3-4 வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

🔶ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வெங்காயச் சாறு மற்றும் சிறிது தண்ணீரை ஊற்றி கலந்து, அதில் சிறிது பூண்டு சாற்றினை ஊற்றி, நன்கு குலுக்கி, பின் அதனை பல்லி வரும் இடங்களில் தெளித்தால், வெங்காயம் மற்றும் பூண்டின் வாசனைக்கு பல்லி ஓடிவிடும். வேண்டுமெனில், சில பூண்டுகளை உரித்து அதனை மூலைகளில் வைத்தாலும் பல்லி போய்விடும்.

🔶காபித் தூளை புகையிலை பொடியுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறு உருண்டைகளாக்கி, அதனை பல்லி அதிகம் வரும் இடத்தில் வைத்தால், அதனை பல்லி சாப்பிட்டால், பல்லி இறந்துவிடும்.

🔶மயில் இறகுகள் பல்லிகளை பயமுறுத்துகின்றன. எனவே மயில் இறகுகளை வீட்டில் வைத்திருந்தால் அந்த பகுதிகளை பல்லிகள் அணுகாது. அதேபோல, காபி மற்றும் தக்காளி பொடியை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து அவற்றை வைத்தாலும் பல்லிகள் அங்கு வராது.

🔶கற்பூரவல்லி இலை வாசனைக்கு பல்லி வராது. எனவே, இந்த தழைகளை எரித்து அதன் புகைகளை வீட்டில் பரவ விட்டால் பல்லி தொல்லை இருக்காது.

🔶வெங்காயத்தின் கடுமையான வாசனையை பல்லிகள் விரும்புவதில்லை. வெங்காயத்தை வெட்டியோ வைத்தாலோ அல்லது சாற்றை சுவர்களில் தெளித்தால் பல்லிகள் போய்விடும்.

🔶நாப்தலின் உருண்டைகளின் வாசனையில் பல்லிகள் ஓடிவிடும். எனவே, வீடு முழுவதும் அவற்றை ஆங்காங்கே வைப்பதன் மூலம் பல்லி தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

🔶வீட்டில் உள்ள பல்லிகளை விரட்டுவதற்கு மிளகு தூள் சிறந்த ஒன்றாக இருக்கிறது. இதற்கு நீங்கள் கருப்பு மிளகை தூளாக அரைத்து எடுத்து கொள்ளவும். ஒரு பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள மிளகு தூளை சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை சுவற்றில் ஸ்ப்ரே செய்து விடவும். மிளகு தூள் இல்லையென்றால் மிளகாய் தூள் கூட சேர்த்து ஸ்ப்ரே செய்யலாம். காரத்தன்மைக்கு பல்லி வராது.

பல்லி வராமல் தடுக்க என்ன செய்யலாம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்