பரீட்சையில் தோல்வியடைந்ததால் ஒரே நாளில் உயிரை மாய்த்துக்கொண்ட 11 மாணவர்கள்
தமிழகத்தில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், 28 மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் 12ஆம் வகுப்பில் 93.76 சதவீதமும், 10ஆம் வகுப்பில் 90.07 சதவீதமும் மாணவ,மாணவியர்கள் தேர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் 10 மட்டும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்த விரக்தியில், ஒரே நாளில் தமிழகத்தில் 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும் 28 மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.