பதுளையில் பாரிய ஆர்ப்பாட்டம் : முற்றாக தடைப்பட்ட ரயில் சேவை

-பதுளை நிருபர்-

இன்று வியாழக்கிழமை அரசுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைப்பெற்று வருகின்ற நிலையில் பதுளை பகுதியில் ரயில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதோடு, பொது போக்குவரத்து வழமை போல் இடம்பெற்று வருக்கின்றன.

அத்தோடு பதுளை நகரில் நூற்றுக்கு 90% வீதமான கடைகள் மூடப்பட்டதோடு நகரங்களில் சில பகுதிகளில் கறுப்பு கொடிகள் தொங்கவிடபட்டுள்ளதோடு, லுனுகலை, மடுல்சீமை, பசறை ஆகிய பகுதிகளிலும் இதே நிலைமைகள் காணப்பட்டு வருகின்றது.

ஹாலிஎல, கெட்டவெல பகுதிகளிலும் மற்றும் ஹாலிஎல பகுதிகளிலும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருவதோடு, பதுளை ஊவா வெல்லச பல்கலைகழக மாணவர்கள் நடைபவணியாக கோஷங்களை எழுப்பியவாறு பதுளை நகருக்கு வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதோடு ஆசிரியர்களும் இவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு, மீதும்பிடிய பகுதிகளிலும் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு, இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பங்களிப்பு மிகவும் அதிகமாக காணப்படுகின்றனர்.

பல இடங்களில் ஆர்பாட்டகாரர்கள், அண்மையில் இராஜாங்க அமைச்சு பதவி ஏற்ற அரவிந்தகுமாரை பதவி விலகுமாறு கோசங்களை எழுப்பியதை காணக்கூடியதாக இருந்தது.

அத்தோடு குறித்த பெருந்தோட்ட பகுதிகள் அனைத்தும் வேலை நிறுத்ததில் ஈடுப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.