நோட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் மண் சரிவு

-நுவரெலியா நிருபர்-

நோட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் மண் சரிவு இதனால் நோட்டன் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

நோட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் அட்லிஸ் பகுதியில் நேற்று மாலை வேளையில் பெய்த கனமழையால் பாரிய மண் மேடு சரிந்து உள்ளது.

இதனால் நோட்டன் கினிகத்தேன செல்ல முடியாத நிலையில் உள்ளது. அதற்கு மாற்று வழியாக நோட்டன் லக்சபான வழியாக வாகனங்கள் செல்ல பாதையை மாற்றி உள்ளனர்.

மேலும் கடந்த 20 மணித்தியாலங்கள் இந்த வீதி மூடப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை மண் திட்டு களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மதியத்துக்கு பின்னர் அவ்வழியில் வாகனங்கள் செல்ல முடியும், என வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.