நேற்று  ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் இன்றும் தொடர்கிறது

அரசுக்கு எதிராக நேற்று  சனிக்கிழமை காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட நடவடிக்கையானது மழையையும் பொருட்படுத்தாது தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் காலிமுகத்திடல் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவருபவர்களுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் சுமார் 500 மழைக் கவச ஆடைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

அத்தோடு, பல்வேறு நலன்விரும்பிகளும் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருபவர்களுக்கு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.