நெருக்கடிக்கு மத்தியில் பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

பாராளுமன்றம் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி இறுதியாக கூடிய பின்னர் ஏப்ரல் 5ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடுகின்றது.

பாராளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை கூடுவதுடன் குறித்த தினங்களில் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு கடந்த வாரம் கூடி தீர்மானித்திருந்தது.