நெடுந்தீவு கடலில் மாயமான கடற்படை வீரர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்-

நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை வீரர், அனலைதீவு கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்படையினரின் படகுகள் மோதி குறித்த கடற்படை வீரர் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கம்பளையைச் சேர்ந்த சாகர பியந்த ஜயசேகர (வயது 27) என்ற கடற்படை வீரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.