நெடுந்தீவில் ஐஸ் போதை பொருளுடன் மூவர் கைது

-யாழ் நிருபர்-

இன்று அதிகாலை 2.30 மணியளவில், நெடுந்தீவு கடலில் வைத்து ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நாச்சிக்குடாவையும் ஒருவர் கொடிகாமத்தையும் சேர்ந்தவர்கள்.

நெடுந்தீவு கடற்படையினரின் விசேட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கடற்படையினர் அவர்களை நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தவுள்ளனர்.