நுவரெலியா- பதுளை வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

எரிபொருள் கோரி,  இன்று திங்கட்கிழமை நுவரெலியா- பதுளை வீதியை மறித்து, மக்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலயம் தடைப்பட்டதுடன், அங்கு பதற்றமான நிலையும் ஏற்பட்டது.

இதனையடுத்து, நுவரெலியா பொலிஸார், அத்தியாவசிய தேவைக்காக வைக்கப்பட்டிருந்த டீசலை,  எரிபொருள் நிரப்பு நிலைய  உரிமையாளருடன் கலந்துரையாடி, வரிசையில் நின்ற வாகனங்களுக்கும் , பொதுமக்களுக்கும் விநியோகித்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.