நீர் மின் உற்பத்தி இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே

நீர்த்தேக்கங்களில் உள்ள நீரைக் கொண்டு இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடும் வரட்சி காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 28 சதவீதத்தை விடக் குறைவடைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தரவுகள் தெரிவிக்கின்றன.

கொத்மலை நீர்த்தேக்கத்தில் 21%, காசல்ரீ நீர்த்தேக்கத்தில் 12%, மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் 29%, சமனல நீர்த்தேக்கத்தில் 14% மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கத்தில் 56% என்ற சதவீதத்தில் நீர்மட்டம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் மின்சார உற்பத்தியில் 80 சதவீதமானவை நீரின் மூலம் பெறப்பட்டிருந்த நிலையில், தற்போது அது சுமார் 20 சதவீதமாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.