நீரில் மூழ்கி கான்ஸ்டபிள் மரணம்
கம்பஹா கடற்கரையில் கடலில் நீராட சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பதுளையை வசிப்பிடமாக கொண்ட கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 24 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பமுனுகம, உஸ்வதகேய்யாவ முதலாம் குளத்திற்கு அருகிலுள்ள கடலில் குறித்த கான்ஸ்டபிள் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் சக அதிகாரிகள் குழுவுடன் குளித்த போதே இவர் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.