நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் காட்டுத் தீ ; 200இற்கும் மேற்பட்ட வீடுகள் நாசம்

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். 200இற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின.

அமெரிக்காவின், நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒரு மலைகிராமத்தில், 12ஆம் திகதி காட்டுத் தீ ஏற்பட்டது.

தீ வேகமாக பரவியதால், அங்கு வசித்த 5,000இற்கும் மேற்பட்டோர் உடைமைகளை கூட எடுக்காமல் தப்பினர். இந்த தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்ட வீடுகள் சாம்பலாகின.