நாளை புதிய அமைச்சரவை பதவியேற்பு

புதிய அமைச்சரவை   நாளை திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவைக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், புதிய அமைச்சரவை கூட்டத்தை நாளைய தினம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, புதிய அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், புதிய அமைச்சரவையில் சமல் ராஜபக்ஸ, பஷில் ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ மற்றும் ஷஷிந்திர ராஜபக்ஸ ஆகியோர் இடம்பிடிக்கமாட்டார்கள் என அறிய முடிகின்றது.