நாணயத்திற்கு பதிலீடாக தங்க நாணயங்கள் புழக்கத்தில்

அதிக பணவீக்கம் காரணமாக சிம்பாப்வே அரசாங்கம் நாணயத்திற்கு பதிலீடாக தங்க நாணயங்களை புழக்கத்தில் விட தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 22 கரட் தங்க நாணயங்கள் புழக்கத்திற்கு விடப்படும் என அந்த நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் ஜோன் பி மங்குட்யா அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.

அந்த நாட்டின் மத்திய வங்கியானது எதிர்வரும் 5 வருடங்களுக்கு எவ்வாறு சட்ட ரீதியாக அமெரிக்க டொலரை ஈட்டுவது தொடர்பில் திட்டமொன்றை உருவாக்கியுள்ளது.

இதேவேளை, இந்த மாதத்தில் சிம்பாவ்பே நாட்டின் பிரதான வட்டி வீதம் 200 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சர்வதேச தகவல் தெரிவிக்கின்றன.

அந்த நாட்டின், டொலருக்கு நிகரான பெறுமதியானது ஏனைய முக்கிய நாடுகளின் நாணயங்களுடன் பெறுமதியுடன் ஒப்பிடும் போது வீழ்ச்சியடைந்துள்ளது.