நாட்டிலுள்ள பிள்ளைகள் துன்பப்படுவதற்கு இடமளிக்க மாட்டேன்

ஜனாதிபதி என்ற வகையில் நாட்டிலுள்ள பிள்ளைகள் துன்பப்படுவதற்கு இடமளிக்காதிருக்க தாம் தீர்மானித்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்தை அலரி மாளிகையில்இ நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக ‘அஸ்வெசும’ வேலைத்திட்டமும் காணிகளுக்கான உரிமையை வழங்க ‘உறுமய’ வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் மற்றும் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

இந்த புலமைப்பரிசில்களை வழங்க ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 4 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த ஜனாதிபதி,  கடந்த 3 வருடங்கள் அனைவருக்கும் கடினமான காலமாக அமைந்தது, மாணவர்களுக்கு பாடசாலைக்குச் செல்வதற்குப் போக்குவரத்து வசதி இருக்கவில்லை, தற்போது அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது, எனவும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்