நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

நாட்டில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதேவேளை, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகும்.

அத்துடன், ஊவா, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.