நள்ளிரவையும் கடந்து தொடர்ந்த ஆர்ப்பாட்டம்
கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரசாங்கத்துக்கு எதிராக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம், நேற்று சனிக்கிழமை நள்ளிரவையும் கடந்து தொடர்ந்தும் பல்லாயிரக் கணக்கானோரின் பங்கேற்புடன் இடம்பெறுகின்றது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் #GotaGoHome எனும் தமது குறிக்கோளை வலியுறுத்தி, ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.