நல்லூர் ​தேருக்கு சென்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவின்போது பக்தர்களால் தவறவிடப்பட்ட, இன்னமும் உரிமை கோரப்படாத பொருட்கள் யாழ். மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கை சங்கிலி – 1, மோதிரம் -1, பணப்பைகள் – 9, கைக்கடிகாரங்கள் – 18, தேசிய அடையாள அட்டைகள் – 4, சாரதி அனுமதிப்பத்திரம் – 4, வங்கி அட்டைகள் – 4, திறப்புகள் – 39 ஆகிய பொருட்களே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டன.

இவற்றை உரிமையாளர்கள் உரிய ஆதாரங்களை காட்டி மாநகர சபை நிர்வாகக் கிளையில் அலுவலக நேரத்தில் இன்று புதன்கிழமை தொடக்கம் அக்டோபர் 10ஆம் திகதி வியாழக்கிழமை வரை பெற்றுக் கொள்ளலாம் என்று யாழ். மாநகரசபை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.