‘நமது வீட்டுத் தோட்டத்தில் ஆரம்பிப்போம்’ எனும் தேசிய செயற்றிட்டம்

-யாழ் நிருபர்-

சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய பசுமை புரட்சியை நோக்காக் கொண்ட ‘நமது வீட்டுத் தோட்டத்தில் ஆரம்பிப்போம்’ எனும் தேசிய செயற்றிட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 20,074 சமுர்த்தி பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனாளர்களுக்கும் தலா 40 வீட்டுத் தோட்ட மரக் கன்றுகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.