நண்பனிடம் அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டிய பெண்ணிற்கு ஏற்பட்ட முடிவு

இந்தியா, மத்திய பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர்,  தனது அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டி பணம் பறித்த ஒரு பெண்ணைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

பெதுல் மாவட்டத் தலைமையகத்திலிருந்து 50 கிலோ மீற்றர்  தொலைவில் உள்ள முல்டாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காந்தி வார்டு நாகா சாலையில் கடந்த புதன்கிழமை இரவு ரத்த வெள்ளத்தில் சிம்ரன் ஷேக் (26) என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அவரது கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட காயம் காணப்பட்டதாக பொலிஸ் கண்காணிப்பாளர் சித்தார்த் சவுத்ரி தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார்,  சனிப் மாலிக் என்பவரை கைது செய்தனர்.

சிம்ரன் ஸ்கூட்டரில் வந்தபோது தாக்கப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரது கைபேசியில் இருந்து சில குரல்பதிவு (Audio)  மற்றும் வீடியோ கிளிப்களை பொலிஸார் மீட்டனர். அதன்மூலமாக அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவிருந்த மாலிக்கை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பேஸ்புக்கில் முதலில் சிம்ரன் ஷேக் அறிமுகமானதாகவும், விரைவில் நண்பர்களாகி இருவரும் நேரில் பலமுறை சந்தித்ததாகவும் மாலிக் பொலிஸாரிடம் கூறினார்.

பின்னர் அவர்களது தனிப்பட்ட வீடியோ கிளிப்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி தன்னிடம் சிம்ரன் ஷேக் பணம் பறித்ததாக அவர் கூறினார்.

இந்த நிலையில்,  சிம்ரன் ரூ.5,000 கேட்டு மிரட்டியதாகவும் அதனால் ஆத்திரமடைந்து அவரைக் கொன்றதாகவும் மாலிக் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

மற்றொரு பெண்ணுடன் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்த சிம்ரன் ஷேக் முயன்றதாகவும் மாலிக் குற்றம்சாட்டினார். மாலிக் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி சித்தார்த் சவுத்ரி தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்