தொழில்பயிற்சி சான்றிதழ் பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை லவ்வேன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 06 மாத கால தொழில்பயிற்சி சான்றிதழ் பாடநெறியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம கலந்து சிறப்பித்தார்.

பாடநெறியை பூர்த்தி செய்த 98 பேருக்கு இதன்போது சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கணனி, மின்னியல், தச்சு, நீர்க்குழாய் பொருத்துனர், சிகை அலங்காரம் உள்ளிட்ட பல பாடநெறிகளை இவர்கள் பூர்த்தி செய்துள்ளதுடன் NVQ -4  கொண்ட சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழாக இது காணப்படுகின்றது.

பெற்றுக்கொண்ட சான்றிதழைப்பயனபடுத்தி தேசிய, சர்வதேச தொழில்களை பெற்றுக்கொள்ள முனைவதுடன் இலகு வங்கி கடனை பெற்று சுய தொழிலை மேற்கொள்வது மிக ஏற்புடையதாக அமையும் என்றும் அதன் மூலம் சிறந்த வாழ்க்கையை அனுபவிக்க வாழ்த்துவதாக இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் சுமித் கொடின்கொடுவ, தேசிய இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்