தொலைபேசி வெடித்ததில் சிறுமி பலி
இந்தியாவில், கேரளா மாநிலத்தில் சிறுமி ஒருவர் தொலைபேசி வெடித்து சிதறியதில், உயிரிழந்துள்ளார்.
திரிச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார், என்பவரின் மகள் (வயது – 8) ஆதித்யா ஶ்ரீ என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று முன் தினம் திங்கட்கிழமை இரவு 10.30 மணி அளவில் தொலைபேசியில் வீடியோ பார்த்து கொண்டிருந்த போது திடீரென தொலைபேசி வெடித்ததில் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தொலைபேசி வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்