துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயம்

திக்வெல்ல வலஸ்கல பகுதியில்  இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

47 வயதுடைய தெமட்டபிட்டிய பகுதியை சேர்ந்த ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர் தெமட்டபிட்டிய நகரில் வெற்றிலை வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே மோட்டர் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.