துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி

வத்தளை – எலக்கந்த பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் , ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மட்டக்குளி அலி-வத்தே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக, பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.