துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி

துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி

அஹூங்கல மித்தரமுல்லயில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 29 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர், பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சிறுவர்கள் சிறு காயங்களோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்