திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் இன்று கையளிப்பு

19ஆம் திருத்தத்தினை வலுப்படுத்தும் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் ஒன்றை சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை  சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளனர்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகரிடம் இது தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Minnal24 FM