
திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய தேர் திருவிழா
-மூதூர் நிருபர்-
திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று வியாழக்கிழமை காலை மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் பங்குபற்றியிருந்தனர்.
இதேவேளை நாளை வெள்ளிக்கிழமை தீர்த்தோற்வம் இடம்பெற்று மறுநாள் பூங்காவனம் இடம்பெற்று வருடாந்த மஹோட்சவம் நிறைவடைய உள்ளமே குறிப்பிடத்தக்கது.