தலாவாக்கலையில் அரசாங்கத்திற்கெதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்
தமிழ் முற்போக்கு கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை தலவாக்கலை நகரில் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மலையகத்தின் பல பாகங்களிலும் இருந்து வந்து மக்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு, ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான சஜித்பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகனேசன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம். கூட்டணியின் இனைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி இராதாகிருஸ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.