தரையிறக்க முடியாமல் நான்கு விமானங்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

கட்டுநாயக்கா பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நிலவிய பனிமூட்டம் காரணமாக விமான நிலையத்தில் இறங்க வந்த 4 விமானங்கள் இறங்க முடியாத நிலையில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் துருக்கியில் இருந்து வந்த TK 730 விமானம் இந்திய திருவேந்திரம் விமான நிலையத்திலும், சீனா, இந்தியா, துபாயில்,இருந்து வந்த விமானங்கள் UL- 226 UL- 750 UL- 174,மத்தள விமான நிலையத்திலும் தரை இறக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக ஓடுபாதை தெளிவாக தென்படாததால், இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்