Sri Lanka Tamil News Site

தம்பதியினர் ஒன்றாக தூங்க , முத்தமிட தடை விதித்துள்ள ஷாங்காய் நிர்வாகம்

- Advertisement -

சீனாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் முத்தமிடல் , கட்டியணைத்தல் உள்ளிட்ட  தடைகளை ஷாங்காய் நிர்வாகம் மீண்டும் அமுல்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் , கொரோனா தொற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இடத்திலிருந்து பரவத் தொடங்கியுள்ள நிலையில் கொரோனா தொற்று மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷாங்காய் நகரில் 2.6 கோடி மக்கள் வசித்து வருகின்ற நிலையில் இங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்வடைந்துள்ளது.

- Advertisement -

இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் முடக்கத்தை அறிவித்துள்ளனர். ஷாங்காய் நகரைத் தாண்டி மற்ற பகுதிகளுக்கும் கொரோனா பரவினால், இன்னும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால், சீனா இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக புதிய கட்டுப்பாடுகளை ஷாங்காய் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

பொது மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று வீதிதோறும் சுகாதார பணியாளர்கள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

“உங்கள் ஆசை, சுதந்திரத்தை கொஞ்ச நாட்களுக்கு கட்டுப்படுத்தி வையுங்கள்” . “இன்று முதல் தம்பதிகள் ஒன்றாக தூங்க வேண்டாம்” . தனியாக தூங்கவும்,  முத்தமிடவும், கட்டியணைக்கவும் வேண்டாம் தனித்தனியே சாப்பிட்டுக் கொள்ளவும். “உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி”என்று அவர்கள் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

- Advertisement -