தமிழ் மொழியை கற்று கொள்ள முடியாமைக்கு கவலைப்படுகிறேன்

-யாழ் நிருபர்-

நான்கு வருடமாக யாழில் கடமையாற்றியும் தமிழ் மொழியை கற்றுகொள்ள முடியாமைக்கு கவலைப்படுகிறேன் என மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் உள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நான் நான்கரை வருடங்களாக யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக கடமையாற்றியிருந்த போதிலும் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முடியாமல் போனமையினையிட்டு கவலைப்படுகிறேன்.

ஆனால் தமிழில் கொஞ்சம் என்னால் கதைக்க முடியும். அவ்வாறு கதைத்தால் சபையில் உள்ளோர் அதனைக் கேட்டு சிரிப்பார்கள் என்பதனால் அதனை நான் கதைக்க விரும்பவில்லை.

எனினும் நான்கு வருடங்களாக இந்த தமிழ் பிரதேசத்தில் இருந்து தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முடியாமல் போனதற்கு நான் கவலைப் படுகின்றேன் என்றதோடு, வடக்கிலுள்ள இளைஞர் யுவதிகளும் ஏனைய மாவட்டங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தால் வழங்கப்படும் சலுகைகளை வடக்கு கிழக்கில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கும் வழங்குவதற்காகவே நாங்கள் இன்று கொழும்பில் இருந்து வந்திருக்கின்றோம் என்றார்