Sri Lanka Tamil News Site

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடல்

- Advertisement -

-யாழ் நிருபர்-

சிறையில் நீண்ட காலமாக உள்ள தமிழ அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கரிசனை செலுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரனால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசப்பட்ட நிலையில் குறித்த விபரங்கள் அடங்கிய ஆவணம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாண ஆளுநருக்கும் குறித்த ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டது.

- Advertisement -

குறித்த ஆவணத்தில் வழக்குகளிடம் பெற்று நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் நீண்ட காலமாக வழக்குகள் இடம் பெற்று வருகின்ற கைதிகள் உள்ளிட்ட 46 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அனுப்பப்பட்ட ஆவணத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடமாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்ட சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில் ஏற்கனவே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியிருந்தார்.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் முன்னாள் நீதி அமைச்சர் அலிசப்ரியுடனும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஆளுநர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

- Advertisement -