தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

இன்று தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது குறைவடையக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய டீசல் தட்டுப்பாடு காரணமாக, 15 சதவீதமான தனியார் பேருந்துகளே நேற்று சேவையில் ஈடுபட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,டீசல் இன்மையால், இந்த நிலைமை இன்று மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

10 முதல் 15 சதவீதமளவில் இன்று பேருந்துகள் சேவையில் ஈடுபடும். வரிசைகளில் காத்திருந்து பேருந்துகளுக்கு நிரப்பிய டீசல் இன்றுடன் தீர்ந்து போகும்.

எனவே, டீசலைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடயத்துடன் தொடர்புடைய அமைச்சரிடம் கோரியுள்ளாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.