தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

எரிபொருள் பிரச்சினைக்கு இவ்வாரம் தீர்வு வழங்காவிட்டால் அடுத்த வாரத்தில் இருந்து நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களும் சேவையிலிருந்து விலகுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இன்று போய் நாளை வா என்பது போல அரசாங்கம் தொடர்ந்து செயற்படுகிறது.

குட்டக் குட்டக் குனிபவன் முட்டாள் என்பதுபோல இனியும் அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பொறுத்துகொண்டு இருக்க முடியாது என்றார்.

தனியார் பஸ் உரிமையாளர்களுக்குப் பல்வேறுப் பிரச்சினைகள் இருக்கின்றன.

எனவே எரிபொருள் பிரச்சினைக்கு அரசாங்கம் இந்த வாரத்தில் தீர்வு வழங்காவிட்டால் அனைத்து பஸ் தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி அடுத்த வாரத்தில் இருந்து சேவைகளில் இருந்து விலகுவோம் எனவும் தெரிவித்தார்.