தச்சுத் தொழில்துறையினர் மொரட்டுவையில் ஆர்ப்பாட்டம்

மொரட்டுவை சிலுவை சந்தியில் தச்சுத் தொழில்துறையில் ஈடுபடும் நபர்களால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காலி வீதியின் காலி நோக்கி செல்லும் ஒழுங்கையில் போக்குவரத்து தடங்கலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மொரட்டுவையில் தச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, மொரட்டுவை மாநகரசபையை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.