தகராறு காரணமாக வீடு ஒன்றின் மீது தாக்குதல்
-யாழ் நிருபர்-
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று பிற்பகல் வேளை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதலில் வீட்டில் படலை, ஜன்னல்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட வீட்டில் உள்ளவர்களுக்கும் அயல் வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.