டெங்கு நோய் அதிகரிக்க கூடிய அச்சுறுத்தல்

தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் அதிகரிக்க கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இதன்படி, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், டெங்கு நுளம்பு பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம அறிவுறுத்தியுள்ளார்.