டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கடந்த வாரத்தில் துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, கடந்த வாரத்தில் 733 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கு முந்தைய வாரம் பதிவாகிய நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 19.6 வீத அதிகரிப்பாகும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் பதிவான டெங்கு நோயாளர்களில் 44.5% பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.