டீசல் கையிருப்பில் இல்லை ; வரிசையில் நிற்க வேண்டாம்

டீசல் கையிருப்பு இல்லாததால் மார்ச் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என CEYPETCO கேட்டுக் கொண்டுள்ளது.

“37,500 மெட்ரிக் டன் டீசலை ஏற்றிச் வந்த கப்பலிலிருந்து திட்டமிட்டபடி இன்று எரிபொருளை தரையிறக்க முடியவில்லை. எனவே, மார்ச் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் CEYPETCO கேட்டுக்கொண்டுள்ளது.

இருப்பினும், அத்தியாவசிய சேவைகளுக்கு டீசல் தொடர்ந்து வழங்கப்படும் என இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.