ஜீவனுக்கு முதுகெலும்பும் இல்லை, சுய புத்தியும் இல்லை – இளைஞர் அணி தலைவர்

-பதுளை நிருபர்-

தந்தையின் பிணத்தை வைத்து அரசியலுக்கு வந்த ஜீவனுக்கு தெரியுமா மலையக மக்களின் வேதனை என இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உரையில் தலவாக்கலை போராட்டத்தை கொச்சைபடுத்தி பேசிய ஜீவனுக்கு முதுகெலும்பும் இல்லை சுய புத்தியும் இல்லை.

மலையக மக்கள் இன்று விலைவாசியின் உயர்வு காரணமாக வீதியில் போராடுகின்றார்கள்

இந்த அறிவில்லாத ஜீவன் ஜனாதிபதி கோட்டாபாயவிடம் 1000 ரூபாய் சம்பளம் கேட்கின்றார்

Shanakiya Rasaputhiran

இன்று நாட்டில் எந்த பொருள் என்ன விலை என்று தெரியாத இந்த ஜீவன்களுக்கு மக்களின் கஸ்டம் தெரியுமா?

அரசி ஒரு கிலோ 220 ரூபா, மாவு 200 ரூபா, தேங்காய்எண்ணெய் 1300 ரூபா, பருப்பு 450 ரூபா, பால்மா 1950 ரூபா விற்கும் போது இந்த ஜீவன் ஜனாதிபதியிடம் 1000  ரூபாய் கேட்கின்றாரே இவருக்கு அறிவு இருக்கின்றதா?

கடந்த ஒரு வருடத்திற்கு முன் 1000 ரூபாய் பெற்று கொடுத்து விட்டோம் என்று கேக் வெட்டி பெனர் அடித்து எங்கள் அப்பாவின் கனவு என்று கத்தியதை மறந்து ஜனாதிபதியிடம் மீ்ண்டும் 1000 கேட்டதில் இருந்து தெரிகின்றது இவர்கள் மக்களுக்காக அரசியல் செய்யவில்லை இவர்கள் வாழதான் அரசியல் செய்கின்றனர் என்று

நேற்று தமிழ் முற்போக்கு கூட்டனி ஏற்பாட்டில் நடை பெற்ற போராட்டத்தில் மக்கள் படையினரை பார்த்த ஜீவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது

அதனால்தான் இவர் சஜீத்பிரமதாசவை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்கின்றோம் என உளறுகின்றார்

தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோம் என்று தெரியாமல் உளறும் ஜீவன் தந்தையின் அனுதாபத்தில் பாராளுமன்றம் சென்றவர் மக்களுக்காக செல்லவில்லை என்பது இப்போது தெரிகின்றது

மீண்டும் இவ்வாறான ஜீவன்களை பாராளுமன்றம் அனுப்புவதை விடுத்து மக்களுக்காக அரசியல் செய்யும் ஒருவரை மலையகத்தில் இருந்து அனுப்புவோம், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad